உறக்கத்தில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கான அறிவுரை
(Advice for children with night time wetting, Tamil translation)
குழந்தை பருவத்தில் உறக்கத்தில் சிறுநீர் கழித்தல் என்பது மிகவும் பொதுவான ஒன்றாகும், இது ஏழு வயதுடைய 15 குழந்தைகளில் 1 குழந்தையையும், 75 இளைஞர்களில் 1 நபரையும் பாதிக்கிறது. இது குடும்பங்களில் பொதுவாக நிகழ்ந்தாலும், யாருடைய தவறின் காரணமாகவும் நிகழ்வது இல்லை.
உங்கள் குழந்தை இச்சூழலில் இருந்து வளரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை - 5 வயதிலிருந்தே சிகிச்சையானது கிடைக்கிறது (Nice வழிகாட்டுதல்களின்படி).
முதலில், உங்கள் குழந்தை ஏன் சிறுநீர் கழிக்கிறார் என்பதை நாங்கள் அறிய வேண்டும் – இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன, அவை அனைத்திற்குமான சிறப்பு சிகிச்சைகளும் உள்ளன.
மலச்சிக்கல் காரணமாக உறங்கும் போது சிறுநீர் கழிக்கக்கூடும்:
- சிறுநீர்ப்பையானது விரிவடைந்து, சிறுநீரை நிரப்புவதற்கு முன்னதாகவே மலக்குடலானது வயிற்றில் உள்ள இடத்தை முழுவதுமாக ஆக்கிரமித்து கொள்ளும்.
- இரவு முழுவதுவதற்குமான சிறுநீரை நிரப்பும் அளவிற்கு சிறுநீர்ப்பையில் போதுமான இடமில்லாத காரணத்தால் அது வெளியே கசிகிறது.
- உறங்கும் போது சிறுநீர் கழிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி மலச்சிக்கல் கவனிக்கப்படாமல் போகலாம், எனவே எப்போதும் முதலில் மலக்குடலைச் சரிபார்க்கவும்.
- ERIC-இன் மலச்சிக்கல் உள்ள குழந்தைகளுக்கான ஆலோசனை, (Advice for children with constipation) அறிகுறிகளைக் கண்டறியும் விதத்தையும் செய்ய வேண்டியவற்றைப் பற்றியும் மேலும் விளக்குகிறது.

சில குழந்தைகளுக்கு பகல் நேரத்திலும் சிறுநீர்ப்பை பிரச்சனைகள் உள்ளன:
- இதில் சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கை/ அவசரநிலை / பகல்நேரத்தில் உறங்கும் போது சிறுநீர் கழித்தல் போன்றவையும் அடங்கலாம்.
- சிறுநீர் பாதை நோய்த்தொற்றும் (UTIகள்) இரவுநேரத்தில் உறங்கும் போது சிறுநீர் கழித்தலை ஏற்படுத்தும்.
- இரவு நேரத்தில், உறங்கும் போது சிறுநீர் கழிக்கும் பிரச்சனைக்கான காரணங்களைக் கண்டறியும் முன்பு பகல்நேர சிறுநீர்ப்பைப் பிரச்சினைகளைச் சரிசெய்ய வேண்டும். சிறுநீர்ப்பைக்கு 4 படிகளைப் பின்பற்றி, அது செயல்படும் விதத்தையும் அதை எவ்வாறு பராமரிப்பது என்பதையும் அறிய ERIC-இன் பகல்நேரத்தில் சிறுநீர்ப்பை பிரச்சனைகள் உள்ள குழந்தைகளுக்கான ஆலோசனை (Advice for children with daytime bladder problems) என்பதைப் படியுங்கள்)
சிறுநீர்ப்பையை ஆரோக்கியமாகப் பராமரித்தும், இன்னும் உறங்கும் போது சிறுநீர் கழிக்கிறார்களா?
உறங்கும் நேரத்திற்கான சரிபார்ப்பு பட்டியலைப் பின்பற்ற வேண்டிய நேரம் இது:
- பகல் நேரத்தில் சரியான முறையில் நீர் அருந்த முயற்சி செய்யுங்கள்- இச்சமயத்தில், பெரும்பாலான நீர் சமமான அளவில் உடலில் பரவுகிறது, அவர்கள் என்ன அருந்த வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்கும் அதே வேளையில் - உறங்கும் நேரத்தில் நீர் அருந்துவதற்கான சிறந்த வழக்கத்தையும் கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள். ஒவ்வொரு நாள் இரவும் உறங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பே நீர் அருந்துவதை நிறுத்துங்கள், அதன் பிறகு காலை வரை நீர் அருந்த வேண்டாம்.
- உறங்கும் நேரத்தின் போது சிறுநீர் கழிப்பதற்கான சிறந்த வழக்கத்தைக் கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள். உறங்க தயாராவதன் ஒரு பகுதியாக சௌகரியமான முறையில் அமர்ந்து சிறுநீர் கழிப்பது குறித்து திட்டமிடுங்கள், சிறுநீர் கழித்து 1/2 மணிநேரத்திற்கு மேல் ஆகியிருந்தால் உறங்குவதற்கு சற்று முன்பு மீண்டும் கழிப்பறைக்குச் செல்லுங்கள்.
- நாப்கின்கள் அணியாமலும் முயற்சிசெய்து பாருங்கள். நாப்கின்களில் எப்போதும் சிறுநீர் கழித்து இருந்தால், குறைந்தது ஒரு வாரத்திற்கும் அதிகபட்சமாக இரண்டு வாரங்களுக்கும் அவர்களை நாப்கின்கள் அணியாமல் இருக்க செய்து பார்க்கவும், நாப்கின்களை அணிந்தே உறங்கி வந்தால், உங்கள் குழந்தை சிறுநீர் கழிக்கும்போது ஒருபோதும் ஈரமாக உணரமாட்டார்கள். இது அவர்கள் எழுந்திருக்க வேண்டியதற்கான தூண்டுதலாக இருக்கலாம்.
- படுக்கையைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். உங்கள் குழந்தை அதிகமாக சிறுநீர் கழித்தால், நீர்ப்புகா மெத்தை கவர், நீர்ப்புகா மெத்தை மற்றும் தலையணை பாதுகாப்பான்களைப் பயன்படுத்துவதன் மூலம் படுக்கை ஈரமாவது குறித்த மன அழுத்தத்தை அகற்றுங்கள். சிறுநீர் கழிப்பதைக் கட்டுப்படுத்த உறிஞ்சும் தாளைப் பயன்படுத்துங்கள். பல்வேறு வகையான படுக்கை பாதுகாப்புப் பொருட்களைப் பற்றி அறிய, ERIC இன் ஆன்லைன் ஷாப்பைப் பார்வையிடவும்.
- உங்கள் குழந்தையைத் தூங்குவதற்கு தயார்படுத்துங்கள். புத்தகத்தை வாசிப்பதன் மூலம் அல்லது விளக்குகள் குறைவான ஒளியில் வைத்து இசையைக் கேட்பதன் மூலம் தயார்படுத்தலாம். மின்னணு பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் - உறங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு டிவி, ஐபாடை பயன்படுத்தவோ கணினி விளையாட்டுகளை விளையாடவோ வேண்டாம், இல்லையேல் மூளை தவறான செய்தியைப் பெறும்.
- உங்கள் குழந்தை விழித்தெழுந்தால் தானாகவே கழிப்பறைக்குச் செல்ல பயிற்சியளியுங்கள். மிகவும் இருட்டாக இருக்காத வகையில் மென்மையான இரவு விளக்கு அல்லது டார்சை பயன்படுத்தச் செய்யுங்கள். அவர்கள் கழிப்றைக்குச் செல்ல வேண்டுமா அல்லது அவர்களின் படுக்கையறையில் சிறு சிறுநீர் கழிக்கும் தொட்டி/ வாளி / பாட்டிலைப் பயன்படுத்த வேண்டுமா என சிந்தியுங்கள். அவர் அடுக்கடுக்கான படுக்கையைப் பயன்படுத்துகிறாரா? அப்படியானால் அவர் கீழ் அடுக்கைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இரவு உடைகளை மேலும் கீழும் இழுக்கவும், அவை ஈரமாகிவிட்டால் அவற்றை மாற்றவும் பயிற்சியளியுங்கள்.
- கழிப்பறைக்கு தூக்கிச் செல்வதைத் தவிர்க்கவும் - அதற்கு பதிலாக, உங்கள் குழந்தையை எழுப்பிவிட்டு, கழிப்பறைக்கு அழைத்துச் செல்லுங்கள். இது படுக்கையில் சிறுநீர் கழிப்பதைத் தடுக்க உதவுவதுடன் குழந்தை தானாக எழாத சமயத்திலும் இது அவர்களை உறக்கத்தின் போது சிறுநீர் கழிக்க ஊக்குவிக்கிறது.
- ஒவ்வொரு முயற்சிக்கும் வெகுமதி அளியுங்கள் – சரியான முறையில் நீர் அருந்துவது, உறக்க நேரத்தில் சிறுநீர் கழிப்பதை நிறுத்துவது மற்றும் இரவில் கழிப்பறையைப் பயன்படுத்துவது ஆகியவற்றிற்கான முயற்சிகளை ஊக்குவியுங்கள்.
(ஆரோக்கியமான சிறுநீர்ப்பைக்கான 4 படிநிலைகளைப் பின்பற்றிய பிறகும், உறக்க நேர சரிபார்ப்பு பட்டியலைப் பயன்படுத்தி உறக்க நேரத்திற்கான சிறந்த வழக்கத்தைப் பயிற்சி செய்த பிறகும், உறக்கத்தில் சிறுநீர் கழிப்பது தொடர்ந்தால், உறக்கத்தில் சிறுநீர் கழிப்பது தொடர்பான மருத்துவகத்தில் பொது மருத்துவர் அல்லது செவிலியரைப் பார்க்க வேண்டிய நேரமாகும். 5 வயது முதல் சிகிச்சையானது கிடைக்கிறது.)
உறக்கத்தில் சிறுநீர் கழிப்பதற்கு வேறு என்னென்ன காரணம் உள்ளன?
சில குழந்தைகளுக்கு சிறுநீர் கழித்தல் அவசியமாக இருக்கும்போது எழ முடியாமல் போகலாம்.
இது அவர்கள் மிக வேகமாக தூங்குவதால் அல்ல - இது உறக்கத்தின் போது சிறுநீர்ப்பை நிறைந்துவிட்டது என்ற செய்தியை அவர்களின் மூளை அடையாளம் காணாததால் தான். இது பெரும்பாலும் குறைவான விழிப்புணர்வு' என்று அழைக்கப்படுகிறது.
நான் எவ்வாறு அறிந்துகொள்வது?
- சிறுநீர் கழித்த பிறகும் உறங்குதல்
- இரவில் உறங்கிய பின்பு சிறுநீர் கழித்தல்
- மிதமான அளவிலான சிறுநீர் கசிவு
- சாதாரண அளவில் சிறுநீரின் செறிவ
சில குழந்தைகள் அதிக அளவில் சிறுநீர் கழிப்பதற்கான காரணம்.
நம் அனைவரின் உடலிலும் இரவில் வாசோபிரசின் (vasopressin) எனப்படும் ஒரு சிறப்பு ஹார்மோன் உருவாக்கப்படும். இது நாம் உறங்கும் போது குறைந்த அளவிலான சிறுநீரை உற்பத்தி செய்யுமாறு நம் சிறுநீரகங்களுக்கு தகவல் தெரிவிக்கிறது. சில குழந்தைகளின் உடலில் போதுமான வாசோபிரசின் உற்பத்தி செய்யப்படாத காரணத்தால் அவர்களின் சிறுநீரகங்கள் அதிக அளவிலான நீர் நிறைந்த சிறுநீரை உற்பத்தி செய்கின்றன - இது அவர்களின் சிறுநீர்ப்பையின் அளவை விட மிக அதிகமாக இருக்கலாம்.
நான் எவ்வாறு அறிந்துகொள்வது?
- உறங்கச் சென்ற முதல் 2-3 மணிநேரத்திற்குள் சிறுநீர் கழித்தல்
- அதிக அளவில் சிறுநீர் கழித்தல்
- நீர் நிறைந்த சிறுநீர்
சில குழந்தைகளின் சிறுநீர்ப்பைகள் இரவில் அவர்கள் கழிக்கும் அனைத்து சிறுநீரையும் வைத்திருக்கும் அளவிற்கு போதுமான அளவு விரிவதில்லை.
நான் எவ்வாறு அறிந்துகொள்வது?
- இரவில் ஒருமுறைக்கும் அதிகமாக சிறுநீர் கழித்தல்
- சிறுநீர் கழித்ததும் விழித்தெழுதல்
- சிறிய அளவு சிறுநீர் கழித்தல்
- சாதாரண சிறுநீரின் செறிவு
சில குழந்தைகள் ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களால் சிறுநீர் கழிக்கலாம்
மதிப்பீடு
- குறைந்தது ஒரு வாரத்திற்காவது இரவு நேர நாட்குறிப்பைப் பூர்த்தி செய்யுங்கள். அதில் இரவில் சிறுநீர் கழிப்பதன் விவரங்களை உற்றுநோக்குவது உங்கள் குழந்தை சிறுநீர் கழிப்பதற்கான முக்கிய காரணத்தைக் கண்டறிய உதவும்.
- உங்கள் மருத்துவரை சந்திக்கச்’ செல்லும்போது நாட்குறிப்பை எடுத்துச் செல்லுங்கள். இதற்கான சரியான காரணத்தை அறிந்துகொள்வதற்காக, உங்கள் குழந்தை எப்போதாவது இரவில் சிறுநீர் கழிக்காமல் இருந்திருக்கிறதா, குழந்தையின் சிறுநீர்ப்பை பகல் நேரத்தில் எவ்வாறு செயல்படுகிறது, அடிக்கடி மலம் கழிக்கின்றாரா போன்ற பல கேள்விகளை மருத்துவர் அல்லது செவிலியர் கேட்பார்கள்.
- உங்கள் குழந்தை உறங்கும் போது சிறுநீர் கழிப்பதால் எவ்வளவு தொந்தரவிற்கு உள்ளாகிறார் என்றும் கேட்பார்கள். உறங்கும் போது சிறுநீர் கழிப்பதை நிறுத்துவதை நோக்கி செயல்படுவது என்பது கடினமான பணியாகும்; இதில் வெற்றியடைய குழந்தை மற்றும் பெற்றோர் இருவருமே ஊக்குவிக்கப்பட வேண்டும்.
குறிப்பிட்ட சிகிச்சைகள்
உறங்கும் போது சிறுநீர் கழிப்பதற்கான அலாரம்: உறங்கும் போது சிறுநீர் கழிப்பதற்கான அலாரம் என்பது குறைவான விழிப்புணர்வுக்கான' சிறந்த சிகிச்சையாக இருக்கலாம். உறங்கும் போது சிறுநீர் கழிப்பதற்கான அலாரங்களில் ஒரு சென்சார் உள்ளது, இது குழந்தை சிறுநீர் கழிக்கத் தொடங்கும் போது அதைக் கண்டறிந்து குழந்தையை (மற்றும்/அல்லது பெற்றோரை) எழுப்பும் அலாரத்தை செயல்படுத்துகிறது.
விழித்தெழும் போது சிறுநீர்ப்பை தசைகள் இறுக்கமடைகின்றன, எனவே குழந்தை சிறுநீர் கழிப்பதை நிறுத்துகிறது. காலப்போக்கில், அலாரம் அணைக்கப்படும் போது அது குழந்தைக்கு சிறுநீர்ப்பை நிரம்பிய உணர்வை கொடுத்து, எழுந்து கழிப்பறைக்குச் செல்ல வேண்டிய அவசியத்துடன் இணைக்க உதவும்.
அலாரத்தைப் பயன்படுத்தும் தேவையில்லாமல் மூளையின் தகவலுக்கு எதிர்வினையாற்ற அவர்கள் கற்றுக்கொள்வார்கள்;
அவர்களாக கழிப்பறைக்குச் செல்ல எழுந்திருப்பார்கள், அல்லது சிறுநீர்ப்பை தசைகளைக் கட்டுப்படுத்தி அதை நிறுத்தவோ அல்லது காலை வரை காத்திருக்கவோ பழகிக்கொள்வார்கள்.
உறங்கும் போது சிறுநீர் கழிப்பதற்கான அலாரங்களை உங்கள் உள்ளூர் மருத்துவகத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது ERIC ஆன்லைன் ஷாப்பிலிருந்து வாங்கிக்கொள்ளலாம். முன்னேற்றத்தைக் கண்காணிக்க உறங்கும் போது சிறுநீர் கழிப்பதற்கான அலாரம் நாட்குறிப்பைப் பயன்படுத்தலாம்.
டெஸ்மோபிரசின் (Desmopressin): குழந்தையின் உடலில் வாசோபிரசினின் அளவை அதிகரிக்க டெஸ்மோபிரசின் என்ற மருந்தை எடுத்துக் கொள்ளலாம். இதை உறங்கச் செல்வதற்கு சற்று முன்பு எடுக்க வேண்டும், இது 8 மணிநேரத்திற்கு குறைவான அளவில் சிறுநீரை உற்பத்தி செய்யுமாறு சிறுநீரகங்களிடம் தெரிவிக்கிறது, எனவே சிறுநீர்ப்பையானது காலை வரை சிறுநீர் உற்பத்தியை நிறுத்தி வைத்திருக்கக்கூடும்.
உறங்க செல்வதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு அதை எடுத்துக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இதனால் குழந்தை உறங்க தயாராகும்போது சிறுநீர் உற்பத்தியாவதை குறைப்பதற்காக முன்கூட்டியே வேலை செய்யத் தொடங்குகிறது.
அதை எடுத்துக்கொள்வதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு நீர் அருந்துவதை நிறுத்துவது, எடுத்துக்கொண்ட பின்பு 8 மணிநேரம் நீர் அருந்தாமல் இருப்பது போன்ற கடுமையான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தற்போதைய தேவையை மதிப்பிடுவதற்கு ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒரு வாரம் மருந்திலிருந்து இடைவெளி விட வேண்டும்
அதிகப்படியான செயல்பாடு: சிறுநீர்ப்பை போதுமான அளவு விரிவடையவில்லை என்றாலோ, குழந்தை அடிக்கடி சிறிய அளவில் சிறுநீர் கழிக்கிறது என்றாலோ, முதலில் மலச்சிக்கல் உள்ளதா என இருமுறை சரிபார்க்கவும். பின்னர் குழந்தை சரியாக நீர் அருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
சிறுநீர்ப்பை தேவையற்ற நேரத்தில் அதிகப்படியாகச் செயல்படுவதன் காரணமாக தொடர்ச்சியான அறிகுறிகள் தோன்றலாம், ஆக்ஸிபியூட்டினின் (Oxybutynin) அல்லது டோல்டெரோடின் (Tolterodine) போன்றவை இதற்கான சிகிச்சையாகும்.
கூட்டு சிகிச்சை: ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களுக்காக உறங்கும் போது சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்குக் கூட்டு சிகிச்சை தேவைப்படலாம்.
சிறந்த சிகிச்சையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னரும் உறங்கும் போது சிறுநீர் கழிப்பது தொடர்ந்தால், சிகிச்சையைத் தொடர்ந்து இரவு நேர நாட்குறிப்பை மீண்டும் பின்பற்ற வேண்டும். பின்னர் மற்றொரு சிகிச்சையைச் சேர்க்கலாம்.
மேலும் தகவல்
Last Reviewed: January 2024
Next Review: January 2027
Upcoming events
Share this page
