Need further support?
மலச்சிக்கல் உள்ள குழந்தைகளுக்கான அறிவுரை
(Advice for children with constipation, Tamil translation)
மலக்குடல் எவ்வாறு செயல்படுகிறது?
- நாம் உண்ணும் உணவு வயிற்றில் மசிக்கப்பட்டு, சூப் போன்ற கலவையாக மாறுகிறது.
- இது சிறு குடலுக்குள் செல்கிறது, அங்கு அனைத்து ஊட்டச்சத்துக்களும் (நல்ல உட்பொருட்கள்) வெளியே பிரித்தெடுக்கப்பட்டு, நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்காக உடலால் பயன்படுத்தப்படுகின்றது.
- இது பெருங்குடல் வழியாகச் செல்லும் போது, நீரானது உறிஞ்சப்பட்டு, மலம் வெளியேற தயாராக இருக்கும் வகையில் ஒரு மென்மையான தொத்திறைச்சி வடிவமாக மாறுகிறது.
- ஒவ்வொரு முறை குடல் தசைகள் அழுத்தும் போதும் பெருங்குடலில் உள்ள மலம் நகர்கிறது.
- மலமானது ஆசனவாயை அடையும் போது, ஆசனவாய் நீட்சியடைந்து, நாம் மலம் கழிக்க வேண்டும் என்ற செய்தியை மூளைக்கு அனுப்புகிறது
என்ன தவறு நடக்கலாம்?
- இந்தச் செய்திக்கு நாம் எதிர்வினையாற்றவில்லை என்றால், மலம் அங்கேயே தங்கிவிடும்.
- குடல் தசைகள் அழுத்திக்கொண்டே இருப்பதால் அதிக மலம் சேர்கிறது, பெருங்குடலில் மலம் அதிகமாகச் சேர்வதால், அதிக நீர் உறிஞ்சப்பட்டு, மலம் கடினமாகி, சிக்கிக் கொள்கிறது.
- மலக்குடல் நீட்சியடையும்போது மட்டுமே செய்திகள் மூளைக்கு அனுப்பப்படுகின்றன. அது நீட்சியடைந்தவாறே இருந்தால்,
நீங்கள் மலம் கழிக்க வேண்டும் என்று புதிய செய்தியைப் பெற மாட்டீர்கள். - மிக விரைவில் உங்களுக்கு மலச்சிக்கல் என்று அழைக்கப்படும் மலம்கழிக்கும் போதான தடை ஏற்படுகிறது.
மலச்சிக்கல் என்பது குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மிகவும் பொதுவான சிக்கலாகும், இது கைக்குழந்தைகள் உட்பட, 3 குழந்தைகளில் 1 குழந்தையைப் பாதிக்கிறது. அது தானாகவே குணமடையும் வரை காத்திருக்க வேண்டாம். உடனடியாக நடவடிக்கை எடுங்கள்!
ஒரு குழந்தைக்கு மலச்சிக்கல் உள்ளதா என்று எப்படி கண்டறிய முடியும்?
- குழந்தைகள் தினந்தோறும் அல்லது குறைந்தபட்சம் ஒரு சில நாட்களாவது மென்மையான மலத்தைக் கழிக்க வேண்டும். 1 - 3 வகைகளுக்குள் மலம் கழித்தால் அல்லது வாரத்திற்கு 4 முறைக்கும் குறைவாக மலம் கழித்தால் உங்கள் குழந்தைக்கு மலச்சிக்கல் உள்ளது என்று அர்த்தமாகும்.
- ஒரு நாளைக்கு 3 முறைக்கு மேல் மலம் கழிப்பது என்பது மலக்குடல் நிரம்பியிருப்பதையும், அவ்வபோது கொஞ்சமாக மலம் வெளியேறுவதையும் குறிக்கும்.
- மண்ணாதல்- இது கடினமான துண்டுகளாக, மென்மையான கூறுகளாக அல்லது மலச்சிக்கல் காரணமான திரவ வெளியேற்றமாக இருக்கலாம், இது நீரோட்டம் என்று அழைக்கப்படுகிறது. குழந்தையின் கட்டுப்பாடின்றி இது வெளியேறக்கூடும்.
- பெரிய வடிவிலான மலம், அல்லது ஒரே நேரத்தில் நிறைய மலம் வெளியேறுவது.
- வயிற்று வலி அல்லது மலம் கழிக்கும்போது வலி ஏற்படுதல்.
- விரிவடைந்த/வீங்கிய வயிறு.
- மிகவும் துர்நாற்றம் வீசும் மலம்/ வாயு பிரச்சனை அல்லது வாய் துர்நாற்றம்.
- சாப்பிட விரும்பாமல் உணரலாம், அல்லது உடம்பு சரியின்றி உணரலாம்.
- நிரம்பிய குடலானது சிறுநீர்ப்பையை அழுத்தி, அடிக்கடி சிறிய அளவு சிறுநீர் கழிப்பது/அவசரமாகக் கழிப்பது/பகல் அல்லது இரவில் படுக்கையிலேயே சிறுநீர் கழிப்பது/ சிறுநீர்பாதை நோய்த்தொற்றுகள் போன்ற சிக்கல்களை உண்டாக்கலாம்.

இந்த அறிகுறிகளில் ஏதேனும் 2 இருந்தாலும் மலச்சிக்கல் உள்ளதாக அர்த்தமாகும்!
மலச்சிக்கலுக்கு எப்படி சிகிச்சையளிப்பது
- இரண்டு வாரங்களுக்கு மலம் கழித்தல் நாட்குறிப்பைப் பராமரியுங்கள்: இது மலம் எவ்வாறு தோன்றுகிறது, எவ்வளவு மலம் கழிக்கிறீர்கள், நாளடைவில் எவ்வாறு மாறுகிறது என்பதைக் குறிப்பிடுங்கள்.
- உங்கள் பொது மருத்துவரைப் பாருங்கள்: மலம்கழிப்பது தொடர்பான நாட்குறிப்பைப் பராமரித்து, உங்கள் குழந்தையின் அனைத்து அறிகுறிகளையும் குறிப்பிடுங்கள்.
- பொது மருத்துவர் உங்கள் குழந்தையைப் பரிசோதித்து, மலச்சிக்கல் ஏற்பட்டுள்ளதற்கான காரணங்களை அறிந்துகொள்வதற்காகக் கேள்விகளைக் கேட்பார்.
- விகோல் (Movicol), லக்சிடோ (Laxido) அல்லது காஸ்மோகோல் (CosmoCol) போன்ற மேக்ரோகோல் மலமிளக்கியை (macrogol laxative) பொது மருத்துவர் பரிந்துரைப்பார் (NICE வழிகாட்டுதல்களின் படி)
மலமிளக்கிகளை எடுத்துக்கொள்வது
- மேக்ரோகோலில் முதலில் சரியான அளவு தண்ணீர் கலக்கப்பட வேண்டும், ஆனால் அதன் பின்னர் மற்ற உணவு / பானம் சேர்க்கப்படலாம் - படிக்கவும்: . மேக்ரோகோல் மலமிளக்கியைப் பயன்படுத்தும் விதம்
- பெரும்பாலான குழந்தைகளுக்கு மலப்பிரிப்புச் சிகிச்சையிலிருந்து (disimpaction) தொடங்க வேண்டும் - அதாவது முன்னதாகச் சேர்ந்துள்ள மலத்தை வெளியேற்ற அதிக அளவிலான மருந்தை எடுத்துக்கொள்வது - படிக்கவும்: மலப்பிரிப்புச் சிகிச்சை தொடர்பான பெற்றோர் வழிக்காட்டி
- மலக்குடலில் இருந்து மலம் வெளியேற்றப்பட்ட பிறகு, தொடர்ந்து மலத்தைச் சீராக வெளியேற்றவும், சிரமமின்றி நகர்த்தவும் ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய அளவிலான டோஸை எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்
- உங்கள் குழந்தை நீண்ட காலம் மலமிளக்கியை எடுக்க வேண்டியிருக்கலாம்,
கவலைப்பட வேண்டாம், மலமிளக்கிகள் அவர்களுக்கு தீங்கு விளைவிக்காது. இருப்பினும், நீண்ட காலத்திற்கு, மலச்சிக்கலுக்குச் சிகிச்சையளிப்பது அது மீண்டும் வராமல் தடுக்கும்.
கழிப்பறையில் மலம் கழித்தல்
- சரியான நேரத்தில் கழிப்பறையைப் பயன்படுத்துங்கள் - உணவுக்குப் பிறகு, உறங்குவதற்கு முன்பு 20 முதல் 30 நிமிடங்களுக்குள்.
- சரியான முறையில் அமருங்கள் - ஒரு பெட்டி அல்லது ஸ்டூலின் உதவியுடன் கால்கள் தட்டையாக இருக்குமாறும், முழங்கால்கள் இடுப்பை விட உயரமாக இருக்குமாறும் அமர வேண்டும். பாதுகாப்பான அமரும் நிலை - அவர்களுக்கு குழந்தைகளின் கழிப்பறை இருக்கை தேவைப்படலாம்.
- சௌகரியமான முறையில் மலம் கழிக்க உதவுங்கள். எனவே பொம்மைகள், விளையாட்டுகள் மற்றும் புத்தகங்களைக் கழிப்பறைக்கு அருகில் வைத்திருங்கள்.

விளையாட்டுச் செயல்பாடுகள் மற்றும் பயிற்சிகளை மாற்றி வழங்குவதன் மூலம் ஒவ்வொரு முறை கழிப்பறையில் அமரும்போதும் 'செயல்பாட்டு நிலையில்' இருக்க உதவுங்கள்:
- கடிகாரத் திசையில் வட்டமாக வயிற்றை மசாஜ் செய்வதும், கழிப்பறையில் முன்னும் பின்னுமாக அசைப்பதும் மிகவும் உதவும்.
- சிரித்தல் / இருமுதல் / ஊதுதல் போன்ற செயல்பாடுகள் வயிற்றுத் தசைகளைக் கீழே தள்ள உதவும்.
- அதை ஒரு வேடிக்கை நிறைந்த நேரமாக ஆக்குங்கள்! உங்கள் குழந்தையை ஊக்குவிப்பதற்கான கூடுதல் யோசனைகளுக்கு Toileting Reward Chartஎன்பதைப் பாருங்கள். 10 - 15 நிமிடங்கள் கழிப்பறையில் அமர்வது போதுமானதாக இருக்கும்.
மலக்குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்
- ஒவ்வொரு நாளும் 6 - 8 வகையான தண்ணீர் சார்ந்த பானங்களை அருந்த உங்கள் குழந்தையை ஊக்குவியுங்கள்.
- அவர்களின் உணவுமுறையில் பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேருங்கள்.
- உடற்பயிற்சி செய்யுங்கள், உடலைத் தொடர்ந்து இயக்கத்திலேயே வைத்திருங்கள்!
மேலும் தகவல்கள்
Last Reviewed: February 2024
Next Review: February 2027
On this page...
Upcoming events
Share this page
